பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய ஸ்நீக் பீக் வீடியோவை லைகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தி உட்பட 5 மொழிகளில் வெளிவர தயாராகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகக் கதையின் அறிமுக உரையை, கமல்ஹாசன் வாய்ஸ் ஓவரில் கூறியிருந்தது போலவே, இரண்டாவது பாகத்திலும் கமல்ஹாசன் கதை சுருக்கத்தை விளக்கி இருக்கும் அறிமுக விடியோவானது சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் என பல இடங்களுக்கு சென்று, படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர்.
https://twitter.com/LycaProductions/status/1651204024715337729?t=H0rCl22jdt4ovhpJCyMBvg&s=08
அதில் ஒரு பகுதியாக, இப்படத்தின் புதிய ஸ்நீக் பீக் வீடியோவை லைகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.







