#Aha மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் நகுலின் “வாஸ்கோடகாமா” !

நகுலின் ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் இன்று வெளியாகிறது. பிரபல தமிழ் நடிகை தேவயானியின் சகோதரர் நகுல், இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகுல்…

Nakul's “Vascotakama” on the #Aha OTD site!

நகுலின் ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் இன்று வெளியாகிறது.

பிரபல தமிழ் நடிகை தேவயானியின் சகோதரர் நகுல், இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் நகுல் பிசியாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் கடந்த ஆக.2ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என தேதி குறிப்பிடமால் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் இன்று வெளியானது. இந்த படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.