29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் சினிமா

அமெரிக்காவில் கர்ஜிக்கும் முத்துவேல் பாண்டியன்… பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ”ஜெயிலர்”…

நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலித்ததாக லாஸ் வேகாஸ் பாக்ஸ் ஆஃபிஸ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்தது. தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சன்பிக்சர்ஸ் படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் 41.57 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக லாஸ் வேகாஸ் பாக்ஸ் ஆஃபிஸ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading