முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழ்நாடு அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு அணையின் 1886ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 1886ல் சென்னை மாகாண…

முல்லைப் பெரியாறு அணையின் 1886ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

1886ல் சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் சமஸ்தான மன்னருக்கும் இடையே முல்லைப்பெரியாறு அணையின் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அணையின் பாதுகாப்பு அம்சங்களை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என்றும், இதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரியும் கொச்சியை சேர்ந்த சுரக் ஷா என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு, முல்லைப் பெரியாறு அணை நீரியல் ரீதியாகவும், கட்டுமான வகையிலும் வலுவாக உள்ளது என உச்சநீதிமன்றத்தின் 3 தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் பெரிய அளவிலான கார் பார்க்கிங் கட்டுமானத்தை கேரள அரசு கட்டி வரும் நிலையில், மனுதாரர் இந்த விவகாரம் குறித்து மவுனம் காப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரரின் மேல் முறையீட்டு உள்நோக்கம் கொண்டதாக உள்ளதாகவும், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுவில் கோரியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.