மும்பையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அரசியல், திரை பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “தன்னைக் காண வேண்டுமெனில் ஆதார் கட்டாயம்” – கங்கனா ரனாவத்தின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினமே மும்பை வந்தடைந்தார். பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரியஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தன்குடும்பத்தினருடன் பாட்னாவிலிருந்து புறப்பட்டு நேற்று காலை மும்பை வந்தடைந்தார். அதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மும்பை வந்தடைந்தார்.
திரைப் பிரபலங்கள் ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மான், கிரிக்கெட் வீரர் தோனி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, பாடகர்கள் அடில், லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், WWE வீரர் ஜான் சீனா, சவூதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நாசர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நேற்றைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.









