விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தாதூன் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை இப்போது இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்து ஒரு புதிய போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.







