‘மெய்யழகன்’ ஓடிடியில் வெளியானது! – எங்கு பார்க்கலாம்?

நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி,…

நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று (அக். 25) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது, விமர்சனங்களை தொடர்ந்து, சில காட்சிகள் நீக்கப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் நீக்கம் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாகிள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.