#BTS இசைக்குழுவுடன் இணையும் Megan Thee Stallion! ரசிகர்கள் உற்சாகம் !

BTS மற்றும் Megan Thee Stallion ஒரு வெப் சீரீஸில் இணைந்து நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன்…

Megan Thee Stallion joins the band #BTS! Fans excited!

BTS மற்றும் Megan Thee Stallion ஒரு வெப் சீரீஸில் இணைந்து நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் BTS பிரபலமடைந்தனர். அவர்களில் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS. ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அதன்படி BTS உறுப்பினரான RM ராணுவ பயிற்சியை மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள் :WeatherUpdate | தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி…

இந்நிலையில், BTS மற்றும் Megan Thee Stallion ஒரு வெப் சீரீஸில் இணைந்து நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இது BTS ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக BTS தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.