கின்னஸ் சாதனை படைத்த #Megastar சிரஞ்சீவி! எதற்கு தெரியுமா?

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 150க்கும் மேற்பட்ட…

Mega Star Chiranjeevi who holds a Guinness World Record! Do you know why?

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 150க்கும் மேற்பட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலக உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இதற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சீவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய புகழ் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அந்தச் சான்றிதழில், இந்திய திரையுலகில் மிகவும் படைப்பாற்றல் மிக்க நட்சத்திரம்-நடிகர் மற்றும் நடனக் கலைஞர் சிரஞ்சீவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.