முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’வீட்டை விட்டு வெளியே தள்ளினார்..’ டிசைனர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்

தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழில், அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை உட்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. பின்னர் தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த வீட்டின் உள் கட்டமைப்புக்காக, இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் திவானுடன் (Rajinder Dewan) ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டார். முதல் கட்டமாக ரூ.8 லட்சத்தைக் கொடுத் தார். பின்னர் அவர் பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.

15 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்து புதிய வீட்டைப் பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிவான பொருள்களை உபயோகித்து அவர் உள்கட்டமைப்பு பணிகளை செய்திருந்தாராம். இதனால் கோபமான அவர், அவரிடம் விசாரித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மீரா சோப்ரா கூறும்போது, கேள்வி கேட்டதும், என்னை என் வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, இப்படிக் கேள்வி கேட்டால் வேலை செய்ய மாட்டேன் என மிரட்டினார். பிறகு அவருடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகச் செய்தி அனுப் பினேன். அதற்கு அவர் மேலும் மோசமாகத் தாக்கிப் பேசத் தொடங்கினார்’ எனக் கூறியுள் ளார்.

இதையடுத்து மும்பை காவல்நிலையத்தில் ராஜிந்தர் மீது மீரா சோப்ரா புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

ஆட்டோவில் பரப்புரை மேற்கொண்ட கமல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Saravana Kumar

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைக்க உத்தரவு

Halley karthi

முதல்வராக நாளை பொறுபேற்கிறார் மம்தா பானர்ஜி!