சென்னை கோயம்பேடு சந்தையை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோயம்பேடு சந்தையில் சுமார் 4,000 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தையில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக 11 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை மூடப்பட்டுள்ளதாகவும், 2,000 கிலோ பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு ’
மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளில் இருந்து 6,84,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், கோயம்பேடு சந்தையில் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
மேலும், இந்த நடைமுறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்படுவதோடு, பிளாஸ்டிக் இல்லா சந்தைகளை உருவாக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








