#ChennaiBeach ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – புறநகர் ரயில்சேவையில் மாற்றம்!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து திருத்தணி, ஆவடி வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் இன்று (செப்.28) கடற்கரைக்கு பதிலாக வியாசா்பாடி ஜீவாவிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் இன்று காலை 10.40 முதல் பிற்பகல் 1.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், செப்.28-இல் திருத்தணியிலிருந்து காலை 8.50 மற்றும் 11 மணிக்கும், ஆவடியிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கும் கடற்கரை வரும் புறநகர் மின்சார ரயில் வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து காலை 11.05 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும், பிற்பகல் 12.10-க்கு திருத்தணி செல்லும் ரயிலும், பிற்பகல் 1.05-க்கு திருவள்ளூா் செல்லும் ரயிலும் கடற்கரைக்கு பதிலாக வியாசா்பாடி ஜீவாவிலிருந்து புறப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 8.50, 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும், மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் இருமாா்க்கத்திலும் கொருக்குப்பேட்டையிலிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.