பயனாளிகளுக்கு செலுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்ய வேண்டாம் என வங்கிகளை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழஙகும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குடுமபத் தலைவிகளுக்கு வங்கிக்கணக்கிற்கு ரூ. ஆயிரம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் சேவை கட்டணம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்குகளுக்கு வரும் பணத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாவது : உதவித் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறும் வங்கிகளின் பண பரிவர்த்தனை வேறு வங்கிகளுக்கு மாற்றப்படும்.
உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்தால், 1100 என்ற முதல்வரின் உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அமைச்சசர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.







