‘லியோ’ திரைப்படத்தின் Fan Made டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
#LeoFirstLook is here! Happy Birthday @actorvijay anna!
Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️#HBDThalapathyVIJAY #Leo 🔥🧊 pic.twitter.com/wvsWAHbGb7— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2023
இந்நிலையில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு வெலியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத லியோ படத்தின் Fan Made டிரைலர் ஒன்று ஒரிஜினல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் க்கு இணியாக வைரலாகி வருகிறத்கு. இதை விஜய்யின் தீவிர ரசிகர் தயார் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். மிரட்டலான இந்த 3டி ப்ரோமோ விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Great effort @MaddyMadhav_ 👏👏 Well done 👍 #Leo https://t.co/rJqR3cLcxz
— Seven Screen Studio (@7screenstudio) June 21, 2023
மேலும், நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.







