லியோ ஆடியோ லான்ச்; மிரள வைக்கும் ஏற்பாடுகள்…

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள்…

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.

லியோ படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ”Keep calm and avoid the battle” என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. அவ்வப்போது வெளிவரும் இதுபோன்ற அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டிருக்கிறது.

அத்துடன் , “KEEP CALM AND FACE THE DEVIL” எனக் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. மேலும் சஞ்சய் தத்தை, விஜய் கொலைவெறியில் கழுத்தை நெரிப்பது அமைந்து உள்ளது.

https://twitter.com/7screenstudio/status/1704835447459897551?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1704835447459897551%7Ctwgr%5Eca6b756f8f4ca80025045b337864effdc1e29381%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews7tamil.live%2Fthe-new-poster-of-vijay-terikum-leo-against-devil-sanjay-dutt.html

இப்படத்தை தமிழ்நாட்டில் 900 திரைகளில் வெளியிட லியோ படத்தின் வெளியீட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட திரையரங்கிலும் வெளியாகவுள்ளது. மேலும் அதுமட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லியோ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்னும் சில தினங்களில் லியோ படத்தின் செகன்ட் சிங்கிள் வெளியாக இருக்கின்றது. அதையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இது ஒருபக்கம் இருக்கையில் தற்போது வெளியான தகவலின் படி லியோ இசை வெளியீட்டு விழாவில் சினிமா துறையை சார்ந்தவர்களை காட்டிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கே அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.