விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிபவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கிடா வெட்டி பிரியாணி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் கிராமத்தில் தேமுதிகவை
சார்ந்த ஞானசேகரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணி
செய்து வருகிறார். இந்த கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு
திட்டத்தில் குளம், வாய்க்கால், ஏரி போன்றவை நூறு நாள் வேலை வாய்ப்பு
திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பாகப் பணி புரியவேண்டும் பணியின் போது அவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாதென்று அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் நேற்று அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து 8 கிடா வெட்டி மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்குத் தலைவாழை இலை போட்டு பிரியாணி விருந்து வைத்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் தன் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







