நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படம் நீண்ட நாளுக்கு பின் சூர்யாவின் கம்பேக்காக அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கருப்பு திரைப்படம் உலகளவில் 340 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதே வேளை கருப்பு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.




