ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் – #ExitPoll முடிவுகளில் ஆளும் JMM கூட்டணி பின்னடைவு!

ஜார்கண்ட் மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல்…

ஜார்கண்ட் மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 37 தொகுதிகளுக்கு 14,218 வாக்குச்சாவடிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, எதிர்க்கட்சி தலைவர் அமர் குமார் , முன்னாள் முதலமைச்சரான சம்பாய் சோர ஆகியோர் இன்று தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் 5 மணி நிலவரப்படி 67.59% வாக்குகள் பதிவாகி உள்ளது. தேர்தல் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் :

CNN நியூஸ் 18 – கருத்துக் கணிப்புகள் :

  • மொத்தம் – 81 இடங்கள்
  • காங்கிரஸ் – 30 இடங்கள்
  • பாஜக – 47 இடங்கள்
  • மற்றவை – 03 இடங்கள்

Peoples Pulse – கருத்துக் கணிப்புகள் :

  • மொத்தம் – 81 இடங்கள்
  • காங்கிரஸ் : 25 – 37 இடங்கள்
  • பாஜக : 44 – 53 இடங்கள்
  • மற்றவை : 05 – 09 இடங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.