முக்கியச் செய்திகள் விளையாட்டு

மெக்காய் காயம்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைந்தார் ஹோல்டர்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஓபட் மெக்காய் காயமடைந்ததை அடுத்து ஜேசன் ஹோல்டர் அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து பங்களாதேஷுக்கு எதிராக நடக்கும் போட்டியில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓபட் மெக்காய், சார்ஜாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் வலது காலில் காயம் அடைந்தார். இன்னும் குணமடையாததால் அவருக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைந்துள்ளார்.

’ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஹோல்டர் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் இருக்கிறார். அவர் விரைவில் அணியுடன் இணைவார். அனுபவம் வாய்ந்த, புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர் அவர் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை தேர்வுக் குழு தலைவர் ரோஜர் ஹர்பர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பட்ஜெட் ஒரு டிஜிட்டல் ‘டிமிக்கி’: ஜெயக்குமார்

Saravana Kumar

போலி கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் கொள்ளை

Gayathri Venkatesan

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Ezhilarasan