ஜான்வி கபூரின் வெள்ளை நிற உடை – தோசையுடன் ஒப்பிடும் நெட்டிசன்கள்!

நடிகை ஜான்வி கபூர் அணிந்திருந்த வெள்ளை நிற உடையை, நெட்டிசன்கள் தோசையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர்,  குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர். …

நடிகை ஜான்வி கபூர் அணிந்திருந்த வெள்ளை நிற உடையை, நெட்டிசன்கள் தோசையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர்,  குஷி கபூர் ஆகியோர் அம்மா வழியில் நடிகையாகிவிட்டனர்.  மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடக்’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கடந்த 6 ஆண்டுகளாக இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.  ஜூனியர் என்டிஆர் உடன் ஜான்வி கபூர் நடித்து வரும் தெலுங்கு படமான தேவாரா பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படமான உலஜ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜான்வி கபூர் நேற்றிரவு உலஜ் திரைப்படத்தின் திரையிடலில் கலந்து கொண்டார். நட்சத்திரங்கள் நிறைந்த இந்த நிகழ்வில் ரேகா, அர்ஜுன் கபூர், குஷி கபூர்,  ஷிகர் பஹாரியா மற்றும் பிற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜான்வி கபூர் வெள்ளை நிற மினி உடையை அணிந்திருந்தார்.  இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.  ஜான்வி கபூரின் உடை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் இந்த தோற்றத்தை விரும்பினாலும், மற்ற நெட்டிசன்கள் அதை தோசையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

அவரின் ஆடையை ‘நீர் தோசை’ மற்றும் ‘ரவா தோசை’ என்று அழைக்கின்றனர். ஒருவர் கூறுகையில், “நாளை காலை உணவைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்- தூண்டியதற்கு நன்றி” என்று கேலி செய்தார்.  அதே நேரத்தில் அவரின் ரசிகர்கள் இந்த உடையில் ஜான்வி கபூர் அழகாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.