ஜெயிலர் படம், கமல் ஹாசனின் பரபரப்பான பிளாக் பஸ்டர் திரைப்படமான விக்ரம் படத்தின் ஆல் டைம் வசூலை வெறும் ஆறே நாட்களில் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், முதல் வாரத்தின் இறுதி நாள்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் படம், கமல் ஹாசனின் பரபரப்பான பிளாக் பஸ்டர் திரைப்படமான விக்ரம் படத்தின் ஆல் டைம் வசூலை வெறும் ஆறே நாட்களில் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது. அதன்படி, விக்ரம் படம் மொத்தமாக 410 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் வெளியான 6 நாட்களில் ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 416 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.







