முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி புதிய கட்சி தொடங்க முடிவு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சி தொடங்க முடிவு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வருவதற்காக தேர்தல் பிரச்சாரத்தின்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அவரின் சகோதரி ஷர்மிளா. தனது சகோதரர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பாத யாத்திரையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சென்றடைவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

எளிமையான முறையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவதற்கு ஷர்மிளாவின் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் தூண்டுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சகோதரர் ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆட்சி புரிந்து வரக்கூடிய நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது தந்தை முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி தாய் விஜயலட்சுமியின் 50 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் லோட்டஸ் பாண்டில் உள்ள தனது இல்லத்தில் நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஒய் எஸ் ஷர்மிளா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பேசிய ஷர்மிளா ஒருங்கிணைந்த ஆந்திராவில் எனது தந்தையின் ராஜன்ன ராஜ்ஜியம் இருந்தது. ஆனால் தற்போது ஆந்திராவில் எனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியின் மூலம் ராஜன்ன ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் அவ்வாறு இல்லாத நிலையில் தெலுங்கானாவிலும் எனது தந்தையின் ராஜன்ன ராஜ்யம் அமையவேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக நல்கொண்டா மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தெலங்கானா மாநிலத்திற்கான புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஷர்மிளாவின் இந்த அறிவிப்பால் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள லோட்டஸ் பாண்ட் இல்லத்தில் கட்சி தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க இதனை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடி

Gayathri Venkatesan

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

Leave a Reply