உலகத்திலேயே 50 சதவிகித வி ஐ பி கள் பயணம் செய்யும் பெருமை கொண்ட பரனூர் டோல்கேட்டை நவீன ஊழலின் அடையாளமாக “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம் என்று சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார்.
பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக 28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கட்டப்பட்ட NH 44 இன் இரண்டு பிரிவுகளுக்கான சலுகை ஒப்பந்தங்களில் வருவாய் பகிர்வுக்கான ஒதுக்கீடு இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 133.36 கோடி வருவாயை இழந்தது.
அதுபோல, ஆகஸ்டு 2019 முதல் ஜூன் 2020 வரை பயணித்த 1.17 கோடி வாகனங்களில் 6.23 லட்சம் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி குற்றம் சாட்டி உள்ளது.
இது குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 2019ம் ஆண்டில் இருந்து ஜூன் மாதம் 2020ம் ஆண்டின் காலகட்டத்தில் மட்டும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியே 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இதில் 62.37 லட்ச வாகனங்கள் அதாவது 53.27 சதவிகிதம் விஐபி வாகனங்கள் என்பதால் அதற்கான கட்டணத்தினை சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இவ்வழியில் பயணித்த 53.27% வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாதது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. அதாவது பரனூர் சுங்கச்சாவடி வையே செல்லும் 10 வாகனங்களில் 5 வாகனங்கள் விஐபி சலுகையில் செல்கின்றனா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இனிடையே செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக ரூ. 6.5கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனை டிவிட்டரில் விமர்சித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள். நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பாஜக மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.







