முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன், வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம்

புதிய ரக ஐபோன்கள், புதிய வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய ரக ஐபோன்களை சிஇஓ டிம் குக் அறிமுகப்படுத்தி வைத்தார். ஐபோன்-14 ரகத்தின் தொடக்க விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் என்றும், ஐபோன் 14 பிளஸ்-ன் தொடக்க விலை 89 ஆயிரத்து 900 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன்-14 புரோ ரகத்தின் தொடக்க விலை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் என்றும், ஐபோன் 14 புரோ மேக்ஸ்-ன் தொடக்க விலை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 900 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புதிய ரக செல்போன்கள் வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதேபொன்று ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் 8 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் 16-ம் தேதி முதல் சந்தைக்கு வரவுள்ளதாகவும், இதன் விலை 29 ஆயிரத்து 900 ரூபாய் முதல் 45 ஆயிரத்து 900 ரூபாய் வரை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ-2 என பெயரிடப்பட்டுள்ள இதன் ஆரம்ப விலை 26 ஆயிரத்து 900 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல, வந்தால் கைதுதான்’: மதுரை ஆதீனம்

Gayathri Venkatesan

மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க சென்னை காவல் துறை வலியுறுத்தல்

G SaravanaKumar

தூங்கிட்டு படம் பார்க்க வாங்கனு கூறியது ஏன் ?- இயக்குநர் கவுதம் விளக்கம்

EZHILARASAN D