வித்தியாசமான திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கும், கேள்விபட்டிருக்கும் நமக்கு, இந்த திருமணம் கொஞ்சமல்ல, அதிகமாகவே ஆச்சரியம்தான். பிறகு, குக்கருடன் திருமணம் என்றால், ஆச்சரியமாக இருக்காதா என்ன?
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் கொய்ருல் அனம் (Khoirul Anam). இவர் சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். குக்கரை மணப்பெண் போல அலங்காரம் செய்தும் இவர் திருமண உடையில் நிற்பது போன்ற புகைப் படங்கள் அவை. அதில் கேப்ஷனாக, நான் ’குக்கரை’முறைப்படித் திருமணம் செய்துகொண் டேன் என்று கூறியிருந்தார்.
மேலும், ’அது வெள்ளையாக இருக்கிறது. அன்பு செலுத்துகிறது. நான் சொன்னதை கேட்கி றது. நீ இல்லை என்றால் எனக்கான அரிசி வேகாது’ என்று டச்சிங்காகக் கூறியிருந்தார். பிறகு குக்கரை முத்தமிடும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த பதிவும் புகைப் படங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட நான்கே நாட்களில் குக்கரை விவாகரத்து செய்து விட்டேன் என்று மற்றொரு பதிவை போட்டிருக்கிறார் கொய்ருல். அதில், இப்போது குக்கரை விவாகரத்து செய்துவிட்டேன். ஏனென்றால், அது சோறை மட்டுமே வேக வைக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த போஸ்ட்டும் வேகமாக பரவி வருகிறது.








