#HyloOpenbadminton | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை மாளவிகா!

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை மாளவிகா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் பல…

Indian player, Malavika, finals , hylo Open badminton , Germany

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை மாளவிகா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஹைலோ ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.

இதையும் படியுங்கள் : IND vs NZ | “தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்” – இந்திய அணியின் கேப்டன் #RohitSharma!

இதில் அபாரமாக விளையாடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார். நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.