32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய; பிரதமர் மோடி வாழ்த்து!…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை 4-வது முறையாக வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தியா-மலேசியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டி துவக்கம் முதல் இருஅணி வீரர்களும் துடிப்புடன் விளையாடினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு கட்டத்தில் மலேசிய அணி 3க்கு1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள், ஆட்டநேர முடிவில் 4-க்கு3 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி,சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்திய அணி 4- வது முறையாக கோப்பை வென்றதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்திய அணியின் வெற்றியின் மூலம் நாடு பெருமை அடைவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

வாரிசு அரசியல் தவறில்லை – கே.எஸ்.அழகிரி

Web Editor

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்: நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்!

Web Editor

அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்

EZHILARASAN D