சென்னை ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஜப்பானை 5-1 என வீழ்த்தி அரையிறுதியில் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் நேற்றைய மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஜப்பான் அணிகள் மோதின.
இதில் இந்திய வீரர் அபய் சிங் தன்னை எதிர்த்து விளையாடிய ஜப்பான் வீரர் டோமோடக
எண்டோவிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தன்னை எதிர்த்து விளையாடிய சடோமி வடனபே’ஐ 3-2 என்ற செட் கணக்கிலும், இந்திய கேப்டன் சவுரவ் கோஷல் தன்னை எதிர்த்து விளையாடிய ரியூனோசுகே சுகே ஐ 3-2 என்ற செட் கணக்கிலும், மற்றொரு இந்திய வீராங்கனை தன்வி கண்ணா தன்னை எதிர்த்து விளையாடிய அகாரி மிடோரிகாவா ஐ 3-0 என்ற நேர் செட் கணக்கிலும் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் ஜப்பானை இந்திய அணி 5-1 என வீழ்த்தி அசத்தியுள்ளது. நேற்றைய
முன்தினம் ஹாங்காக் – சீன அணியையும், நேற்றைய தினம் தென்னாபிரிக்க அணியையும் இந்தியா ஒயிட் வாஷ் செய்திருந்த நிலைய்ல், குரூப் B இல் முன்னிலை வகித்தது. இதனை அடுத்து இன்றைய தினம் ஜப்பானை 5-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இன்று
மலேசியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது இந்தியா.







