ரஷ்மிகா மந்தனாவை நான் அப்படி சொல்லவே இல்லை; ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!…

ரஷ்மிகா மந்தனா குறித்து  தெரிவித்த கருத்துக்கு  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.  ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா.…

ரஷ்மிகா மந்தனா குறித்து  தெரிவித்த கருத்துக்கு  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வெளிவரும் எத்தனையோ திரைப்படங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் படத்துக்கு தடை கோரி குரல்கள் எழுப்பியுள்ளன.

ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாமிய கலாச்சாரத்தையும், இஸ்லாமிய பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக, புகார் எழுந்தது. மேலும் இப்படத்தை வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், ரஷ்மிகா மந்தனா குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து இந்த நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதில், அன்பிற்குரிய நண்பர்களே… நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், ” எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் ‘என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.” புரிதலுக்கு நன்றி. என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.