“நான் எனது அன்பான நண்பரை இழந்துவிட்டேன்” -விஜயகாந்த்திற்கு பிரதமர் மோடி புகழஞ்சலி!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவுக்கு பிரதமர்…

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.  நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட  பிரதமர் மோடி , கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தார்.

விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த்.  தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர்.  ஒரு அரசியல்வாதியாக அவர் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.  அவரின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

https://twitter.com/narendramodi/status/1742424721554358413

இந்நிலையில் விஜயகாந்த் மறைவால் ஏராளமான மக்கள் தங்கள் மனங்கவர்ந்த நட்சத்திரத்தை இழந்துள்ளனர்;  ஏராளமான கட்சித் தொண்டர்கள் அன்பிற்குரிய தலைவரை இழந்து வாடுகின்றனர்;  ஆனால் நானோ,  என்னுடைய உற்ற தோழனை இழந்திருக்கிறேன்.

‘கேப்டன்’ சிறப்பு மிக்கவராக திகழ்ந்தது தொடர்பாக என்னுடைய கருத்துகளை விரிவாக எழுதியுள்ளேன்;  பல்வேறு நாளிதழ்களில் வெளியாகி உள்ள விஜயகாந்த் பற்றிய தன்னுடைய கட்டுரையை குறிப்பிட்டு பிரதமர் மோடி ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.