”மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு உறக்கமில்லாமல் இருந்தேன்” புத்தக வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரையின் ”சொல்வழிப்பயணம்” புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எழுத்தாளரும் , திரைப்பட இயக்குநருமான மாரி செல்வராஜ் ஆகியோ கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ தமிழக அரசு எழுத்தாளர்களை வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியை செய்து வருகிறது. மாணவர்கள் புத்தகம் வாங்குவதில் அதிகம் செலவு இடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பேசிய அவர் ”அண்டை மாநிலங்கள் செயல்படுத்த நினைத்து ஆய்வு செய்து செல்லும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து தவறாக பேசுவது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் எதிர்த்து பேசினால் தான் பெரிய ஆளாக நினைப்பார்கள் என்று நினைக்கிறார்கள், மாணவர்களின் நலனுக்காக சிந்திப்பது பெற்றோர்களும் ஆசிரியர்கள் மட்டும்தான்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்ததாவது..
“ திரைப்படம், புத்தகம் என எதுவாக இருந்தாலும் வெளிவர வேண்டும். அவை வெளிவந்த பின்னர் அதன் தன்மையை மக்கள் முடிவு செய்வார்கள். தற்போது எழுத்தாளர்களுக்கு உள்ள சுதந்திரம், சினிமாவில் இல்லை. வாசிப்பும், எழுத்தும் மனிதர்களுக்கும் மட்டுமே உள்ளது பிற எந்த உயிரினங்களுக்கும் இல்லை.
மாமன்னன் திரைப்படம் வெளியாகும் ஒரு நாள் முன்பு வெளியில் பேசும்
நபர்களால் உறக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகே வெளியில் பேசிய நபர்கள் வேறு, மக்கள் வேறு என புரிந்து கொண்டேன்” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.