ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு!

ராஜஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 49 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,  ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச…

ராஜஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறதுஏற்கனவே 49 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,  ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி  இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்து, 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுஇன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்நடப்பு தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.

ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடிய நிலையில், 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.  ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனஅதில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் தலா 9 முறை வெற்றி பெற்றுள்ளன.  இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.