மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை (CSSS) பெற அக்டோபர்
31-ம் தேதி வரை http://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் பயிலும்
தகுதியுடைய மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை ( CSSS) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது.
நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள்
இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் & ஆதாரில் உள்ளது போல் பதிவிட
வேண்டும் என்றும், பெயரிலோ அல்லது முன் எழுத்திலோ ஏதேனும் மாற்றம் இருப்பின்,
ஆதாருடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து வரும் அக்டோபர் 31-ம்
தேதிக்குள் http://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
என்றும் மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000
என்று 3 ஆண்டுகளுக்கு ரூ.30,000, முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000
என்று 2 ஆண்டுகளுக்கு ரூ.40,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை http://www.tndce.in
இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் உயர்கல்வித் துறை
அறிவித்துள்ளது.








