ரூ.300 கோடியை நெருங்கும் #TheGOAT – 4ஆவது நாள் வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு

தி கோட் திரைப்படம் வெளியாகி 4நாட்கள் கடந்த நிலையில் வசூல் குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம்…

How much is #TheGOAT - 4th grossing close to Rs 300 crore? Crew announcement

தி கோட் திரைப்படம் வெளியாகி 4நாட்கள் கடந்த நிலையில் வசூல் குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன் அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி, விடுமுறை அல்லாத நாள் என்பதால், வெள்ளிக்கிழமை குறைந்த தி கோட் படத்தின் வசூல், விடுமுறை நாளான சனிக்கிழமை மீண்டும் அதிகரித்தது. அதன்படி உள்நாட்டில் சுமார் 33 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்படி தமிழ்நாட்டில் ரூ.29.1 கோடி, தெலுங்கு வெர்ஷனில் ரூ.1.75 கோடி மற்றும் வடமாநிலங்களில் ரூ.2.15 கோடி வசூலும் அடங்கும்.  இதன் மூலம் வெளியான மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்தது.

இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. அங்கும் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளியான மூன்றே நாட்களில் ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்தது. இந்த நிலையில் தி கோட் படத்தின் 4வது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 4வது நாளில் மொத்தமாக 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சணா கல்பாத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.