உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த முழு விவரம் இங்கே!

உலகக் கோப்பை அரையிறுதி  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று  தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 40 லீக்…

உலகக் கோப்பை அரையிறுதி  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று  தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 40 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

கடைசி இடத்துக்காக நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் போராடி வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் வரும் 15-ஆம் தேதி முதல் அரையிறுதி, கொல்கத்தாவில் 16-ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி மற்றும் அகமதாபாத்தில் 19-ஆம் தேதி இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில்,  இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு ‘புக்மைஷோ’ இணையதளத்தில் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

முதல் அரையிறுதி போட்டி

  • தேதி: 15 நவம்பர் 2023
  • இடம்: வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியம், மும்பை
  • நேரம்: மதியம் 2 மணி IST
  • டிக்கெட் விலை: ரூ 5000 முதல்

இரண்டாவது அரையிறுதிப் போட்டி

  • தேதி: 16 நவம்பர் 2023
  • இடம்: ஈடன் கார்டன், கொல்கத்தா
  • நேரம்: மதியம் 2 மணி IST
  • டிக்கெட் விலை: ரூ 900 முதல்

இறுதி போட்டி 

  • இடம்: நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்
  • டிக்கெட் விலை: ரூ 2000 முதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.