உதகையில் பெய்த கனமழை; கடுங்குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் பெய்த கனமழை காரணமாக, கடுங்குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும், சாரல் மழையும்…

உதகையில் பெய்த கனமழை காரணமாக, கடுங்குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. மேகமூட்டத்துடன் ரம்யமான காலநிலை நிலவி வந்தது.இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

அதைத் தொடர்ந்து, சேரிங் கிராஸ், படகு இல்லம், மத்தியப் பேருந்து நிலையம், பிங்கர் போஸ்ட், காந்தள், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனினும், மலைத்தோட்டங்களில் காய்கனிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.