புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலோர டெல்டா
மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்திருந்தது.
அதன்படி, புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக வாகன ஒட்டிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் சிரமத்திரிக்குள்ளாகினர். மேலும் சாலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என மீன் வளத்துறை அறிவுருத்தியுள்ளது.
மேலும், கனமழை காரணமாக மழை நீரில் கழிவு நீர் கலந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர். ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீரை வெளியேற்றுவதில் மாவட்ட நிர்வாகம் பொறுப்பின்றி இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.







