தாயையும், கங்கை நீரையும் தோளில் சுமந்து சென்ற இளைஞர்! வைரலாகும் வீடியோ!

ஹரித்வாரில் கன்வார் யாத்திரையின்போது ஒரு நபர் தனது தாயை ஒரு தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற சம்பவம் வீடியோவாக பகிரப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில்…

ஹரித்வாரில் கன்வார் யாத்திரையின்போது ஒரு நபர் தனது தாயை ஒரு தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற சம்பவம் வீடியோவாக பகிரப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் ஆண்டுதோறும் கன்வார் யாத்திரை நடைபெறுவது வழக்கமான ஒன்று . இந்த கன்வார் யாத்திரையின் போது சிவபக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பதே முக்கியமான நிகழ்வாகும். இதற்காக இந்த பயணத்தின் போது சிவ பக்தர்கள் காவி உடை அணிந்து தோள்களில் மூங்கிலால் ஆன கம்புடன் புனித நீரை கூடத்தில் கட்டி தொங்கவிட்டு, பாதயாத்திரையாக நடந்தே புனித தலங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு நீரை அர்ப்பணிப்பார்.

அந்த வகையில் இந்த புனிதமான கன்வார் யாத்திரை நடப்பாண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கிய நிலையில், ஹரித்வாரில் கன்வார் யாத்திரையின் போது ஒரு நபர் தனது தாயை ஒரு தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த காட்சி 11 வினாடிகள் கொண்ட வீடியோவாக எடுக்கப்பட்டு, ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1800-க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வருவதோடு, பலரும் அந்த மகனை பாராட்டியும் வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.