“மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி | மக்களின் வாக்கு எங்களுக்கே” -நிர்மலா சீதாராமன்…!

“மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் எங்களுக்கு வாக்கு அளிப்பார்கள்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல்…

“மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் எங்களுக்கு வாக்கு அளிப்பார்கள்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவிக்காலத்தின் ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.  நிர்மலா சீதாராமன் கூறுகையில்,  “நாட்டு மக்கள் எதிர்காலத்தை நோக்கி உள்ளனர். அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் முன்னேறி வருகிறோம்.மக்கள் எங்களுக்கு வலுவான பெரும்பான்மை அளிப்பார்கள். எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.