நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இணையும் புதிய படமான ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.
AR ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.







