சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே இன்று காலை தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் 1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையிலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று மாலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765-க்கும், சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் 1,18,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று ஒரு நாள் மட்டும் மொத்தமாக சவரனுக்கு 2,280-ம், கிராமுக்கு 285-ம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்த நிலையில், மாலையில் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




