தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய விலை நிலவரம் என்ன ?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில் சென்னையில் நேற்று(மார்ச்.06) காலை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 20-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64ஆயிரத்து160க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்று பிற்பகல் தங்கம் விலை  உயர்ந்தது. அதன்படி   ஒரு கிராம்  ரூ.8060க்கும், சவரன் ரூ.64,440க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று(மார்ச்.07) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,030-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.64,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.