ஓடிடியில் வெளியானது ‘கருடன்’ திரைப்படம்!

‘கருடன்’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார்,…

‘கருடன்’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இத் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘கருடன்’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘கருடன்’ படத்தை சிம்ப்ளி சவுத் (Simply South) ஓடிடி தளத்திலும் காணலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.