நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைப்பு

நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்கின் குயின்ஸ் பகுதியில் உள்ள கோயிலின் வாசலில் இருந்த காந்தி சிலையை மர்ம நபர்கள் சிலர் சுத்தியல் கொண்டு தாக்கி சேதப்படுத்தியதுடன்,…

நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்கின் குயின்ஸ் பகுதியில் உள்ள கோயிலின் வாசலில் இருந்த காந்தி சிலையை மர்ம நபர்கள் சிலர் சுத்தியல் கொண்டு தாக்கி சேதப்படுத்தியதுடன், அதன் மீது ஏறி நின்று துண்டு துண்டாக உடைத்துள்ளனர். மேலும் அதன் அருகிலும், சாலையிலும் காந்தியை ((நாய் என்று)) அவதூறாக ஸ்பிரே மூலம் எழுதி தங்களது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அது தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் குயின்ஸ் பகுதியில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதனிடையே, இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.