ஹாலிவுட் திரையுலகில் இருந்து மிகவும் சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்க-கனடிய நடிகருமான மேத்யூ பெர்ரி இப்போது உயிருடன் இல்லை. ஆம், ‘பிரண்ட்ஸ்’ என்ற சிட்காம் தொடரின் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி தனது 54வது வயதில் காலமானார். அமெரிக்காவின் பிரபல சிட்காம் ஃபிரண்ட்ஸ் நடிகர் மேத்யூ பெர்ரியின் உடல் சந்தேகத்திற்கிடமான நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. ‘பிரண்ட்ஸ்’ புகழ் மேத்யூ பெர்ரியின் மறைவு திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேத்யூஸ் ‘பெவர்லி ஹில்ஸ் 90210’ மற்றும் ‘எ நைட் இன் தி லைஃப் ஆஃப் ஜிம்மி ரியர்டன்’ ஆகிய தொடரின் மூலம் தொலைக்காட்ச்சிகளில் தோன்றினார். ஆனால் அவர் தனது உண்மையான புகழை ‘பிரண்ட்ஸ்’ என்ற தொலைக்காட்சி சிட்காமில் இருந்து பெற்றார். இந்தத் தொடர் 22 செப்டம்பர் 1994 இல் தொடங்கி 6 மே 2004 அன்று முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில், 236 அத்தியாயங்கள் கொண்ட ‘பிரண்ட்ஸ்’ பத்து சீசன்கள் ஒளிபரப்பப்பட்டன. ஃபூல்ஸ் ரஷ் இன், அல்மோஸ்ட் ஹீரோஸ், தி ஹோல் நைன் யார்ட்ஸ், 17 அகெய்ன் மற்றும் தி ரான் கிளார்க் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஒரு பேட்டியில் , மேத்யூ தனது 14 வயதிலிருந்தே போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு அவர் பல நோய்களை சந்திக்க வேண்டியிருந்தது. போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு 9 மில்லியன் டாலர்கள் அதாவது 74 கோடி ரூபாய் செலவிட்டதாக மேத்யூ கூறியிருந்தார். ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரன்வீர் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி மற்றும் பிற பாலிவுட் நட்சத்திரங்கள் மேத்யூ பெர்ரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்







