முதலமைச்சர் ஸ்டாலினுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சந்திப்பு

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். பின்னர் சித்தராமையா பேசியதாவது: விசிக சார்பாக விருது பெறுவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சி. முதலமைச்சர் ஸ்டாலினை…

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார்.

பின்னர் சித்தராமையா பேசியதாவது:

விசிக சார்பாக விருது பெறுவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். விருது பெறுவது மிகவும் மகிழ்ச்சி.

முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். நான் கேட்டது, படித்ததில் முதலமைச்சர் ஸ்டாலினின் அரசு சிறப்பாக செயல்படுகின்றது.

பெரியாரால் திராவிட இயக்கம் மிகவும் உறுதியானது. பெரியார், அம்பேத்கரை பின்பற்றுகிறார் திருமாவளவன்.

அம்பேத்கரிசம், பெரியாரிசத்தை பின்பற்ற வேண்டும். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானாவில் பாஜகவால் நுழைய முடியாது. கர்நாடாகவில் நுழைந்துள்ளனர், அவர்களை வீழ்த்த முயன்று வருகிறோம்.

வரும் தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-சை வீழ்த்துவோம் என்று சித்தாரமையா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.