33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

“மார்க் ஆண்டனி படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1 ரூபாய் விவசாயிகளுக்கு” – நடிகர் விஷால் அறிவிப்பு..!

’மார்க் ஆண்டனி’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’ டைம் டிராவல் கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்பு வெளியான விஷால் படங்களின் முதல் நாள் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான மார்க் ஆண்டனி முதல் நாளில் ரூ.7 முதல் 9 கோடிவரை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் உள்ளதால் தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் படம் வசூலில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பையொட்டி நடிகர் விஷால் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மார்க் ஆண்டனி நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களாகிய இந்த தெய்வங்கள் மற்றும் மேலே இருக்கும் தெய்வங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்த படம் வென்றதில்லை. ’மார்க் ஆண்டனி’ படம் ப்ளாக்பஸ்டர் என்று கேள்விப்படும்போது, என்னை மட்டுமில்லாமல் எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கம் ஆகியவற்றை பாராட்டுவதை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது.

நீங்கள் கொடுத்த காசுக்கு நீங்கள் சந்தோசப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் கூட ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள். இதை மனதில் வைத்து அடுத்தடுத்த நல்ல படங்களை தருவேன். நண்பர்கள் பலரும் எனக்காக பதிவிட்டனர். குறிப்பாக என் டார்லிங் கார்த்தி, டார்லிங் வெங்கட் பிரபு, டார்லிங் சிம்பு என எல்லாருக்கும் என்னுடைய நன்றி. உங்களால் கண்டிப்பாக நான் இன்று நிம்மதியாக தூங்குவேன். ஏற்கெனவே நான் உறுதியளித்தபடி ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் நான் விவசாயிகளுக்கு வழங்குவேன்”. இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்பத்துக்கு நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞரிடம் விசாரணை

EZHILARASAN D

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு

G SaravanaKumar

உதகை வனவிலங்கு கண்காட்சி தொடக்கம்

G SaravanaKumar