நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி நாளை (டிச.29) தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.







