பிரபல மலையாள நடிகர் நிர்மல் பென்னி உயிரிழப்பு!

பிரபல மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் உயிரிழந்தார்.  கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் நவகிரகத்து ஸ்வாகதம். இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நிர்மல் பென்னி (வயது 37).…

பிரபல மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் நவகிரகத்து ஸ்வாகதம். இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நிர்மல் பென்னி (வயது 37). லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஆமென் படத்தில் பாதிரியாராக நடித்து பிரபலமானார். இவர் ஆமென், தூரம் உள்ளிட்ட 5 படங்களில் நடித்துள்ளார்.

நிர்மல் பென்னி இன்று (ஆக. 23) அதிகாலை மாரடைப்பால் தனது வீட்டில் உயிரிழந்தார். திருவனந்தபுரத்தில் வசித்து வந்த நிர்மல் பென்னி இறந்த செய்தியை அவரது நண்பரும், இயக்குநருமான சஞ்சய் படியூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் படியூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“என் அன்பு நண்பருக்கு மனமுடைந்த பிரியாவிடை. கொச்சச்சன், ஆமென் படத்தின் மையக் கதாபாத்திரம் நிர்மல் பென்னி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். என் அன்பு நண்பரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நித்திய அமைதியில் ஓய்வெடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.