ஆதிக்க சக்தியால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வு; ரத்து செய்ய அனைவரிடமிருந்தும் குவியும் ஆதரவு -அமைச்சர் துரைமுருகன்

ஆதிக்க சக்தியால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், கல்வியாளர்களும் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என உண்ணாவிரத போராட்டதில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா…

ஆதிக்க சக்தியால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், கல்வியாளர்களும் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என உண்ணாவிரத போராட்டதில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக ஆளுநரை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை, அமைச்சர் துரைமுருகன் இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுரையை தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டதில் பேசிய துரைமுருகன், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வு பறித்துள்ளது. ஆதிக்க சக்தியால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், கல்வியாளர்களும் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹிந்தி திணிப்பை எதிர்த்து உயிர்விட்டவர்களின் சாபத்தால் அந்த ஆட்சி ஒழிந்தது. இதேபோன்று நீட் தேர்வை திணிக்கும் ஆட்சியும் ஒழிந்துவிடும் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். கலைஞர் கருணாநிதி, மு.க. ஸ்டாலினுடன் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். தற்போது உதயநிதி பங்கேற்றுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு பேசி வருகிறேன். வரும்காலத்தில் தலைவராகும் தகுதி உதயநிதிக்கு உள்ளது எனக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.